Monday, November 4, 2013

யாழ். வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் எழுச்சியுடன் இடம்பெற்ற ஒளி விழா நிகழ்வுகள் (Photos)

யாழ்ப்பாணம் வசாவிளான் பிரதேசத்தில் அமைந்துள்ள வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் இவ் வருடத்துக்கான ஒளி விழா நிகழ்வுகள் 04.11.2013 திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றன.

கல்லூரி அதிபர் வே.த.ஜயந்தன் தலைமையில் ஆ.சி.நடராஜா கலையரங்கத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மறை மாவட்ட ஆயர் வண.இராயப்பு யோசேப் ஆண்டகை கலந்து கொண்டு சிறப்பித்ததோடு உரையுமாற்றினார்.

 சிறப்பு விருந்தினராக வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராசா கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் வருகை தரவில்லை. எனினும் அவரால் அனுப்பி வைக்கப்பட்ட வாழ்த்துச் செய்தி கல்லூரி ஆசிரியர் ஒருவரினால் வாசிக்கப்பட்டது.

 மேற்படி ஒளி விழா நிகழ்வில் கௌர விருந்தினராக வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா கலந்து கொண்டதுடன் உரையுமாற்றினார். இந் நிகழ்வின் போது அமெரிக்கன் மிஸன் தலைவர் அருட்பணி ஈமனாக் புனிதராஜா, அருட்பணி இ.ராஜ்குமார், உரும்பிராய் பங்குத் தந்தை யூட் நிக்சன் மற்றும் பங்குத் தந்தை நிக்சன் கொலின்,அமெரிக்கன் மிசனரி யூலியனா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

 முதலில் விருந்தினர்கள் பாடசாலை மாணவர்களின் பான்ட் வாத்திய அணி வகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கீதம் முழங்க தேசியக் கொடி,பாடசாலைக் கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டன. அடுத்து விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் வைபவம் இடம்பெற்றது. தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் மேடையை அலங்கரித்தது. இயேசு பாலனின் பிறப்பைக் கூறும் வகையில் அமைந்த வில்லுப்பாட்டு,நாடகம் என்பன இடம்பெற்றன.

இறுதியாக நத்தார் தாத்தா வருகை நன்றி கூறல் என்பவற்றுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றது. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை அவர்கள் கல்லூரி சார்பாகப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னமொன்றும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

மன்னார் ஆயர் உள்ளிட்ட குழுவினர் அங்கு இடம்பெற்ற மதியபோசன நிகழ்விலும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: செய்தி, படங்கள் - செ. ரவிசாந்




















Monday, May 6, 2013

திறந்து வைக்கப்பட்ட புதிய கணனிக் கூடம்!

அமரர் முருகேசு நாகலிங்கம் அவரது துணைவியார் செல்லம்மா ஆகியோரின் ஞாபகார்த்த கணனிக் கூடத் திறப்பு விழா கல்லூரி முதல்வர் V.T ஜெயந்தன் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

விழாவில் எடுக்கப்பட்ட படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது....

 படங்கள் - நன்றி: மயூரிணி

 











Sunday, May 5, 2013

தனியாக இயங்கி வந்த பழைய மாணவர் சங்கம் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தோடு இணைந்து கொண்டது!

வயாவிளான் மத்திய மகாவித்தியாலயத்தில்இன்று 05/05/2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.

 இது வரை தனியாக இயங்கி வந்த பழைய மாணவர் சங்கம் வசாவிளான் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளது...

 புதிய நிர்வாக உறுப்பினர் விபரங்கள் விரைவில் இணைக்கப்படும்...

தகவல், படங்கள் : நன்றி - சுஜீவன்



படங்கள் : ஜதீஸ்

 

Saturday, May 4, 2013

புதிய கணனிக் கூடத் திறப்பு விழா!

அமரர் முருகேசு நாகலிங்கம் அவரது துணைவியார் செல்லம்மா ஆகியோரின் ஞாபகார்த்த கணனிக் கூடத் திறப்புவிழா கல்லூரி முதல்வர் V.T ஜெயந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

 06/05/2013 திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் ஆ.சி நடராஜா கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. தகவல் - சுஜீவன்


புதிதாக திறக்கப்படவுள்ள கணனிக் கூடத்தின் எழில் மிகு காட்சிகள்.... 

படங்கள் - மயூரிணி





Friday, May 3, 2013

பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டம்!

வயாவிளான் மத்திய மகாவித்தியாலயத்தில் நாளை 05/05/2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

அனைத்து பழைய மாணவர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

அழைப்பிதல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

 தகவல் - சுஜீவன்


Friday, April 12, 2013

நடராஜா சேரின் நினைவாக உதயமான புதிய பேஸ்புக் பக்கம் (Facebook Like Page)!

வசாவிளானில் இருந்து 1500 க்கும் மேற்பட்ட மாணவர்களோடு இடம்பெயர்ந்த பாடசாலையை உரும்பிராயில் கொட்டில்கள் போட்டு மாணவர்களுக்கு கல்வியை இடைவிடாது புகட்டிய எங்கள் முன்னை நாள் அதிபர் திரு ஆ.சி நடராஜா அவர்களின் நினைவுகளைச் சுமந்து வரும் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கமே இது..... www.facebook.com/R.C.Nadarajah

உலகெங்கும் பரந்து வாழும் பழைய மாணவர்கள் எல்லோரும் இந்தப் பக்கத்தில் இணைந்து அவரோடு பழகிய பசுமையான நினைவுகளைப் பகிருங்கள்...





Tuesday, March 19, 2013

வயாவிளான் மத்திய மகாவித்தியாலயம் இன்று!

பாழடைந்து போயிருந்த எமது பாடசாலை இன்றைய நிலையில் உலகெங்கும் பரந்து வாழ்கின்ற பழைய மாணவர்களின் தீவிர முயற்சியால் எழுந்து நிற்கின்றது வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம்.

அதன் அழகிய பெயர் பலகையினையும், முகப்பினையும் படங்களில் காணலாம்.

படங்கள் : நன்றி - ரமேஷ் 


 



Thursday, February 28, 2013

மாணவச் செல்வங்கள்!

வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் காலை ஆராதனையின் போது எடுக்கப்பட்ட படங்களே இவை....



Wednesday, January 16, 2013

முன்னாள் அதிபர் நடராஜாவின் நினைவாக...!

வசாவிளானில் உள்ள வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் மண்டபத்துக்கு நடராஜா நினைவு மண்டபம் (A.S Nadarajah Auditorium) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.