வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்துக்கு பொருளாதார அமைச்சு 5 இலட்சம் ரூபா உதவி!
20 வருடங்களின் பின்னர் சொந்த இடத்தில் இயங்கத் தொடங்கியுள்ள வயாவிளான் மத்திய மகாவித்தியாலயத்திற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் 5 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதித் திட்டப் பணிப்பாளர் ச. குகதாஸ் தெரிவித்தார். வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் பிராத்தனை மண்டபத்தை திருத்துவதற்காக ஒரு இலட்சத்து 688 ஆயிரத்து 260 ரூபாவும், வகுப்பறை மற்றும் அலுவலகத்தைப் புனரமைப்பதற்கு ஒரு இலட்சத்து 845 ஆயிரத்து 285 ரூபாவும், ராமசாமி மண்டபத்தைத் திருத்துவதற்கு ஒரு இலட்சத்து 408 ஆயிரத்து 623 ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மொத்தமாக 4 இலட்சத்து 942 ஆயிரத்து 168 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதெனவும், இந்த வேலைகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அபிவிருத்தியை மேற்கொள்ளாது பிரமாண்டமான நிகழ்வு எதற்கு? - வயாவிளான் ம.ம.வி.குறித்து ஜனாதிபதி கேள்வி

வடக்கு மாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் நேற்று வவுனியா ஜோசப் முகாமில் இடம்பெற்றது.அதன்போது வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் அபிவிருத்தி குறித்து கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த செயலாளர், பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்கென 6.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு ஒப்பந் தம் செய்யப்பட்டுள்ளது எனப் பதிலளித்தார்.இதனையடுத்து குறுக்கிட்ட ஜனாதிபதி, பாடசாலையை கையளிக்கும் நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றது.எனினும் அபிவிருத்திப் பணிகள் மேற் கொள்ளப்படவில்லை எனத் கூறுகிறீர்களே எனத் தெரிவித்து வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தை கையளிக்கும் நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களையும் காண்பித்தார்.
நன்றி
செய்தி:- வலம்புரி
செய்தி:- வலம்புரி
No comments:
Post a Comment